உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3,910 பேருக்கு தேர்தல் ஆணையம் தடை
Subscribe to Oneindia Tamil
மதுரை: உள்ளாட்சித் தேர்தல்களில் செலவு கணக்கை காட்டாத 3,910 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இடைத் தேர்தல்கள் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் நகர்புறத்தில் போட்டியிட்ட 2,395 பேரும், கிராமப்புற உள்ளாட்சிகளில் போட்டியிட்ட 1,515 பேரும் என மொத்தம் 3,910 பேர், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.
இவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்க உத்தரவு பெறப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுகின்றது, என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications