மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது

கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகளையும், 25 நகராட்சித் தலைவர் பதவிகளையும், 61 பேருராட்சித் தலைவர் பதவிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேமுதிக ஒதுக்கியுள்ளது.
இன்று நிருபர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இதைத் தெரிவித்தனர்.
அதே போல 25 நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மற்றும் 61 பேரூராட்சித் தலைவர் பதவிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து மாவட்டத் தலைவர்கள் பேசி முடிவு செய்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையிலான குழுவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் பேசி 2 மாநகராட்சிகளின் மேயர், 25 நகராட்சிகளின் தலைவர், 61 பேரூராட்சிகளின் தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மட்டத்திலான வார்டுகள் குறித்தும், மாவட்ட அளவில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து பேசி தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக புதிதாக உருவான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே உருவான கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டது.
தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று புதிய கூட்டணியை அறிவித்தன. இந்தக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மார்க்சிஸ்ட் அழைத்து வருகிறது.
இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் நேற்றிரவு தேமுதிக சென்னை மாநகராட்சிக்கான 200 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் அதிர்ச்சி நிலவியது. இந் நிலையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications