தமிழக உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை
சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வர உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் எழுதி கொடுத்த அறிக்கைகள் ஏற்கப்படாமல் தலைமை செயலரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனால் சென்னையில் தேர்தல் பணியாற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர். தற்போது 100 சதவீத சுதந்திரமாகவும், நேர்மையாக செயல்பட்டு அறிக்கையை சமர்ப்பிக்க கூறிய பிறகே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்களின் சுதந்திரத்தில் மாநில தேர்தல் ஆணையமோ, மற்ற உயர் அதிகாரிகளோ தலையிடமாட்டார்கள். சென்னையில் இந்த முறை 3 கண்காணிப்பார்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக வர உள்ளனர்.
தேர்தலின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவே, வெளிமாநில பார்வையாளர்களை அழைத்துள்ளோம். இந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு வாக்குசாவடியில் 70' விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுக்கலாம். சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட மற்ற எல்லா முறைகளும் இந்த தேர்தலில் பின்பற்றப்படும், என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications