சாக்கடை கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பலி
கரூர்: கரூரில் சாக்கடை கால்வாயின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், 4 பெண்கள் பலியாகினர். 6 பெண்கள் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில், பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவரது நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒட்டிய பகுதியில் சால்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது வந்தது. சுமார் 100 அடி நீளம் கொண்டு இந்த கால்வாய் அமைக்கும் பணியில் 10 பெண்கள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று பணியின் போது, 2 புறத்திலும் அமைக்கப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 10 பேரும் சுவர் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவத்தின் போது 10 பேரும் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.
இதில் லட்சுமி(60) இறந்த நிலையில் மீட்கப்பட்டார். படுகாயமடைந்த மற்ற 9 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர். இதில் சகோதரிகளான அற்புதமணி, புஷ்பா மற்றும் மற்றோரு பெண் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications