சுறா மீன் கடித்ததில் கால்களை இழந்த பிரிட்டன் நபர்
கேப்டவுன்: தென் ஆப்பிக்காவில் கடலில் குளித்த பிரிட்டன் நபரின் கால்களை கடித்த சுறா, காலுடன் கடலுக்குள் போய் விட்டது.
தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள கேப்டவுனில், பிஸ் ஹோக் கடற்கரை உள்ளது. இங்கு நேற்று பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கோஹன்(43) என்பவர் குளிப்பதற்காக வந்தார். அப்போது, கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுறா மீன்கள் சுற்றி திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதை பொருட்படுத்தாத மைக்கேல், கடலில் இறங்கி ஜாலியாக குளித்தார். அப்போது மைக்கேலை நோக்கி வந்த 2 சுறா மீன்கள, அவரது கால்களை கடித்தது. இதில் அதிக ரத்த போக்கு மற்றும் சேதமடைந்த கால்களுடன் மைக்கேல் போராடி கரையை எட்டினார்.
அங்கு அவரை ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். சுறா கடித்ததில் அவரது வலது கால் முழுமையாகவும், இடது கால் முட்டிக்கு கீழேயும் இழந்திருந்தார்.












Click it and Unblock the Notifications