மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள்-நாடு முழுவதும் அஞ்சலி

டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவுக்கு திடீரென அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் சோனியா காந்தியிடம் சென்ற அத்வானி, அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மருத்துவமனையில் சோனியா காந்திக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. ஆனால் அவருக்கு என்ன நோய், எதற்காக அறுவைச் சிகிச்சை என்பது குறித்து காங்கிரஸ் தரப்பும், சோனியா காந்தி குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை.
நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். சர்வ மதப் பிரார்த்தனைகளுக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications