உள்ளாட்சித் தேர்தல்- நாளை ஓய்கிறது முதல் கட்ட பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் முதல் கட்ட பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் அக் 17, 19 ஆகிய இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமா 19ம் தேதியன்று 65 நகராட்சிகளுக்கும், 270 பேரூராட்சிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் எந்த ரூபத்திலும் பிரசாரம் செய்யக் கூடாது.

நெல்லையில்...

நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக நெல்லை மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விகேபுரம் நகராட்சிகள், சேரன்மகாதேவி, ஏர்வாடி, கோபாலசமுத்திரம், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மேலச்சேவல், மூலக்கரைப்பட்டி, முக்கூடல், நாங்குநேரி, நாராணம்மாள்புரம், பணகுடி, பத்தமடை, சங்கர்நகர், திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர், வீரவநல்லூர் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பஞ் யூனியன்களுக்கும் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் நகராட்சி, ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், கானாம், நாசரேத், பெருங்குளம், சாத்தான்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்போரை, திருச்செந்தூர், உடன்குடி, ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கும், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குலம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பஞ்சாயத்து யூனியன்களுக்கும் முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கும் நாளை மாலை 5 மணிக்குள் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல சென்னை உள்ளிட்ட பிற மாநகராட்சிகள், தேர்தல் நடைபெறும் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+