'கூடங்குளம்': அச்சத்தை போக்க வேண்டியது உங்கள் கடமை-பிரதமரிடம் திமுக
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பொதுமக்களின் கருத்துக்கு முன்னுரி்மை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சார்பில் அக் கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு பெயர் பெற்ற ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர் சேதங்களும், பொருட் சேதங்களும் வரலாற்று உண்மைகளாக ஆகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட ஒரு விபத்து தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையங்களில் நேர்ந்து விடுமோ என்ற பொது மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை.
பொது மக்களின் நியாயமான அச்சத்தைப் போக்கும் வகையில், இரு அரசுகளும் இணைந்து மக்களுக்கு உரிய விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் தந்து, அவர்களின் முழு நம்பிக்கையை பெற்ற பிறகே, கூடங்குளம் அணு உலைகள் செயல்பாட்டுக் கொண்டு வரப்பட வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் அத்தியாவசிய தேவை என்றாலும், பொது மக்களின் கருத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டினையும் கருணாநிதியின் கருத்தினையும் பிரதமரிடம் டிஆர்.பாலு தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications