உயர்நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத தேர்தல் ஆணையம்- திமுக கோர்ட் அவமதிப்பு வழக்கு
சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத தேர்தல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 239 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முழுமையாக வீடியோ மூலம் கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை. உயர்நீதி்மன்ற உத்தரவுப்படி வெப் காமராக்களும் பொருத்தப்படவில்லை. வெளி மாநில போலீஸார் மற்றும் பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை.
தேர்தலை முறையாக நடத்தாத 239 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாரதி.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications