அக் 27, 28ல் தமிழகத்தில் அத்வானி ரத யாத்திரை-மதுரையில் பொதுக் கூட்டம்

ஊழல் மற்றும் வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தேசிய தலைவர் அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 11ம் தேதி பிகாரில் இருந்து துவக்கப்பட்ட இந்த யாத்திரை தமிழக நகரங்களின் வழியாக செல்ல உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊழலுக்கு எதிரான அத்வானியின் யாத்திரை தமிழகத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும். இதில் 27ம் தேதி பல தமிழக நகரங்கள் வழியாக சென்று மதுரையை அடைந்து, அங்கு பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுவார்.
வரும் 28ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், நெல்லை, கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று, பின் கேரளா மாநிலத்தை அடைவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications