2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு- விறுவிறுப்பாக நடந்து முடிந்தது

65 முதல் 70 சதவீத வாக்குகள் இந்த வாக்குப் பதிவில் பதிவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவைப் போல இல்லாமல் இந்த முறை படு விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுறுசுறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது.
சென்னைப் புறநகர்களான தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
முதல் கட்ட வாக்குப் பதிவின்போது சென்னையில் மந்தமான நிலை காணப்பட்டது. ஆனால் இன்றைய வாக்குப் பதிவின்போது காலையிலிருந்தே நல்ல விறுவிறுப்பு காணப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலுமே மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து படு ஆர்வமாக வாக்குகளைப் பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் காலையிலேயே பெருமளவில் வாக்குச் சாவடிகளுக்குத் திரண்டு வந்து வாக்களித்தனர். சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சில பகுதிகளில் மட்டும் மின்னணு எந்திரங்களில் பழுது, வெப் காமராக்கள் செயல்படவில்லை என்ற புகார்கள் இருந்தன. அவையும் கூட சரி செய்யபப்ட்டு வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது.
பெரிய அளவில் எந்தப் பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.
2-ம் கட்ட வாக்குப்பதிவுக்காக 38,020 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,92,67,501 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 80 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளதைத் தொடர்ந்து 21ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications