தமிழகம் முழுவதும் பரவலாகக பலத்த மழை-பல பகுதிகள் வெள்ளக்காடானது

கன்னி்யாகுமரிப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது தற்போது மேலும் நகர்ந்து, வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்துக் கட்டுகிறது. அதேபோல கடலோர தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று காலை நல்ல மழை பெய்தது.
சென்னையில்...
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று காலையில் வெளுத்து வாங்கிய மழை பின்னர் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் தற்போது விட்டு விட்டுமழை பெய்து வருவதால் நகரமே சகதிக் காடாகியுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் சாலைகள் பெயர்ந்து போய் படுமோசமாக காட்சி தருகின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆங்காங்கு சாலைகள் பள்ளமாக காணப்படுவதால் டூவீலர்கள் செல்வது பெரும் சிரமமாகியுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் நிலைமை படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுவதால் தீவுகள் போல பல பகுதிகள் மாறியுள்ளன.
டெல்டா பகுதிகளில் கன மழை
இதேபோல டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
மன்னார்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால் மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடரும் மண் சரிவு
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பழனி மலையில் யானைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள், வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
சென்னை உள்பட தமிழகத்தில் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.
ரயில் போக்குவரத்தில் தாமதம்
தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. மழை காரணமாக, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ள பகுதிகளில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக வருகின்றன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications