ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு
ராஜபாளையம்: தென்மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் சிக்கிய மதுரை கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் கனமழையினால் தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது. ராஜபாளையம் அருகே உள்ள காட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள நீர்காத்த அய்யனார் கோயிலுக்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமையன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காட்டாற்றில் நீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் (20), செய்யது இப்ராஹிம் (22), ரமேஷ் (21) உள்பட 8 கல்லூரி மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து ராஜபாளையம் தீயணைப்பு அதிகரிகளும், வீரர்களும் அய்யனார் கோயில் ஆற்றுக்குச் சென்று கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
வெள்ளநீர் அதிகரித்து வருவதால் ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications