14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி-தெற்கு ரயில்வே
நெல்லை: தெற்கு ரயில்வேயில் ரூ. 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதன்மை என்ஜினியர் மனோகர் தெரிவித்தார்.
நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் 26 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நெல்லையில் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை இன்ஜினியர் மனோகர் கட்டுபாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முலம் 24 மணி நேரமும் ரயில் நிலைய நிகழ்வுகளை கண்காணிக்கலாம். இதில் பதிவு செய்யப்படும் தகவல்களை 7 நாட்கள் வரை பெறலாம்.
தென்னக ரயில்வேயில் 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையில் 7 இடங்களிலும், திண்டுக்கல், மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராவுடன் பயணிகளின உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வசதி நெல்லையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும் மதுரை-திண்டுக்கல் இடையே மின்மயாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மின் நிலையங்கள் அமைக்கப்பட்டவுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications