தூத்துக்குடியில் மழையால் தொழில் பாதிப்பு- 9 லட்சம் டன் உப்பு தேக்கம்

தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.60 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் உப்பு உற்பத்தி சிறப்பாகவும், அதிகமாகவும் நடக்கும்.
இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு சராசரி உற்பத்தியை விட கூடுதலாக 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 22 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகியுள்ளதாக தெரிகிறது.
கடந்த மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 22,000 ஏக்கர் உப்புளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் உப்பு பண்டல் போடுதல், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லுதல், உப்பு அரவை, அயோடினேற்றம் உள்ளிட்ட பணிகளும், உப்பு தொழிலின் சார்பு தொழில்களும் கடந்த 10 நாட்களாக நடைபெறவில்லை.
சுமார் 9 லட்சம் டன் உப்பு, உப்பு பண்டல்கள், உப்பளங்கள், மில்கள், குடோன்களில் தேங்கி கிடக்கி்ன்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications