நாமகல்லில் பஸ் 'பாடி பில்டிங்' தொழிற்சாலை: ஜெயலிலதா அறிவிப்பு

தலைமைச் செயலகத்தில் நேற்றும், இன்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடந்தது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு,
1. மேட்டுப்பாளையம், திருச்சி, அவினாசி, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்
2. உக்கடம், ஆத்துபப்பாலத்தில் மேம்பாலங்கள்
3. அரியலூரில் மழையால் சேதமடைந்த 45 கிமீ சாலைகள் சீரமைத்தல்
4. ராமநாதபுரத்தில் நடைமுறையில் உள்ள டோக்கன் அடிப்படையில் ஒரு நாள் மீன் பிடிக்கும் திட்டத்திற்கு பதிலாக ஆழ்கடலில் நாள் முழுவதும் மீன்பிடிக்கும் திட்டம்
5. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அருகே மேம்பாலம்
6. சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீவிபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தீப்புண் சிகிச்சைக்காகவும் சிறப்புப் பிரிவு அமைப்பதுடன், அந்த மருத்துவமனையும் மேம்படுத்துதல்
7. திருவண்ணாமலை மகா தீபத்திற்கு இந்து அறநிலையத்துறை அளித்து வரும் நிதி 50ல் இருந்து 70 சதவீதமாகிறது
8. கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர்
9. நாமகல்லில் பஸ் கூடு கட்டும் தொழிற்சாலை
10. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் வசதி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
11. புதிய அரசு விடுதிகளில் சூரிய மின்சக்தி வசதி
12. மத விழாவாகும் சித்ரா பவுர்ணமி
13. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆறு மீது புதிய பாலம்
மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது
திறம்பட செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கௌரவித்தார்.
2011ம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவில் குவிந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் முதலாவது பரிசையும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அகமது 2வது பரிசையும், மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் 3வது பரிசையும் பெற்றனர்.
சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனிநாதனுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஏ.சி. மோகன்தாசுக்கு சான்றிதழ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனுக்கு சான்றிதழும், ரூ.25,000ம், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வள்ளலார் ஆகியோருக்கு 10 கிராம் தங்கப்பதக்கமும் அளித்து பாராட்டினார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் முதலிடம் வகித்தமைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் சே.மகரபூஷணுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications