திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு காப்பு
திருச்சி: குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்சம் ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சாமுவேல் ஞானம். துரைப்பாண்டி என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க அவரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைப்பாண்டி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி துரைப்பாண்டி ரூ.50,000 பணத்தை இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானத்திடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீசார் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானத்தை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications