திருமங்கலம் அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மதுரை: திருமங்கலம் அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் வீரபாண்டி(37). இவர் ரைஸ் மில் வைத்து அரிசி வியாபாரம் செய்து வந்தார். ரைஸ் மில்லின் ஒரு பகுதியிலேயே இவரது வீடும் உள்ளது.
இந்த நிலையில் வீரபாண்டி, அவரது மனைவி செல்வி (32), குழந்தைகள் ஷர்சினி (7), நந்தகுமாரன் (4) ஆகியோர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீரபாண்டி வீட்டில் இருந்த சுவிட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பொறி கீழே வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் மீது பட்டதால், சிலிண்டர் திடீரென்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதனால் வீடே தீயும், கரும் புகையுமாக காட்சி தந்தது. இந்த சம்பவத்தில் வீரபாண்டி குடும்பத்தினர் அனைவரும் தீயில் கரிகி பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புபடையினர் நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியான சம்பவம் திருமங்கலம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications