மதுரை 15வது வார்டு தேர்தலில் அதிமுக வெற்றி
மதுரை: மதுரை மாநகராட்சி 15வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 17ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 15வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயமணி திடீரென மரணம் அடைந்தார். இதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வார்டில் கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. வார்டில் மொத்தமுள்ள 8,934 வாக்குகளில் 5,810 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நேற்று காலை மாநகராட்சி அண்ணா மாளிகையில் எண்ணப்பட்டது.
இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 2,428 வாக்குகளும், திமுக வேட்பாளர் மாறவர்மன் 1,985 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 443 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் அதிமுகவுக்கு 84 கவுன்சிலர்கள் உள்ளனர். தற்போது 15வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளக்கோவிலை கைப்பற்றியது அதிமுக
அதேபோல வெள்ளக்கோவில் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனகசபாபதி மாரடைப்பால் காலமானார். இதனால் இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளக்கோவில் நகராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் செல்வராஜ், பாஜக சார்பில் இளங்கோ, சுயேச்சைகள் உட்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 36 வாக்குச் சாவடிகளிலும் வாக்கு பதிவு துவங்கியது. ஆண் வாக்காளர்கள் 9,647 பேர், பெண் வாக்காளர்கள் 9,387 பேர் என மொத்தம் 19,340 வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தம் 70.84 சதவீத வாக்குகள் பதிவானது.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வெள்ளக்கோவில் அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி 10,707 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications