கோர்ட்டை அவமதித்த இன்ஸ்பெக்டரை 5 மணி நேரம் கூண்டில் நிறுத்திய நீதிபதி
கோவை: நீதிமன்றத்தை அவமதித்த இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற கூண்டில் 5 மணிநேரம் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தார் கோவை மாஜிஸ்திரேட்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் 3 கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் சாட்சிகள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
ஆனால் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாஜிஸ்திரேட் சீனிவாசன், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவனுக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
ஒரு மாதத்துக்குப்பின் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் உனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மாறாக இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள் வெளியே சென்ற பிறகு நீதிமன்றத்திற்கு சென்றார்.
வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றம் துவங்கும் முன்பே ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதாக கூறிய மாஜிஸ்திரேட், காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விசாரணைக் கூண்டில் நிற்க உத்தரவிட்டார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் 5 மணி நேரம் நீதிமன்ற கூண்டில் நின்றார். பின்னர் அரசு வக்கீல் வந்த பிறகே வாரன்ட் திரும்ப பெறப்பட்டது. இதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் விடுவிக்கப்பட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications