அதிமுகவில் சேர்ந்த நாகராஜ ரெட்டிக்கும், சிபிஐக்கும் தொடர்பில்லை-தா. பாண்டியன்
மதுரை: அதிமுகவில் இணைந்த நாகராஜ ரெட்டிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி ஏராளமான கம்யூனிஸ்ட் தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது.
நாகராஜரெட்டி சட்டசபை தேர்தலின் போது கட்சி வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளரை ஆதரித்தார். இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் நாகராஜரெட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்ததாக அக்கட்சியின் பத்திரிகையான முரசொலியில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த நிலையில் தான் நாகராஜா ரெட்டி திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்றுள்ளார். எனவே, அவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications