சங்கரன்கோவில் இடைத்தேர்தல்- மோதலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமடைந்துள்ளனர்.
சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான கருப்பசாமி கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனை காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
முந்திய மதிமுக
சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மதிமுக தயாராகி விட்டது. அக்கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்து விட்டனர். தற்போது அதிமுகவும் வரும் 1ம் தேதி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
நிதி அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையான், நத்தம் விஸ்வநாதன், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அதிமுக சார்பி்ல் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தொழிலதிபர் ஜெய்சங்கர், வேலுசாமி ஆகிய 3 பேரில் ஒருவர் போட்டியிடலாம் என்ற பேச்சு தொகுதி முழுவதும் வலம் வருகிறது. திமுக சார்பில் போட்டியிடுவார்கள் குறித்தும் பெருத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
விலை உயர்வு எதிரொலிக்கும்
விலைவாசி உயர்வு, பால்கட்டணம்,பேருந்து கட்டணம் உயர்வினால் மக்களின் மனநிலையை நாடிப்பிடித்து பார்க்க அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்த இடைத்தேர்தலில் களமிளங்குவார்கள் என்பதால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் இப்பொழுதே பரபரப்பை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications