அரசு பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4,35,500 நஷ்டஈடு: விரைவு நீதிமன்றம் உத்தரவு
மதுரை: அரசு பஸ் மோதி பலியானவரின் குடும்பத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 4,35,500 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சவுந்தரவள்ளி. தையல் வேலை மற்றும் மொத்தமாக ஜவுளிகளை வாங்கி அந்தப் பகுதியில் தவணை முறையில் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12.6.2010 அன்று சவுந்திரவள்ளி தனது மகன் நந்திராஜனுடன் தல்லாகுளத்தில் உள்ள அரசு வங்கிக்கு சைக்கிளில் சென்றார்.
சின்ன சொக்கிகுளம் அருகே அவர்கள் சென்று கொண்டிருக்கையில் பின்னால் வந்த அரசு டவுன் பஸ் நந்திராஜன் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சவுந்தரவள்ளியின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
விபத்துக்கு நஷ்டஈடு கோரி வேல்முருகன், அவருடைய மகள் பத்மாவதி ஆகியோர் மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.பொன்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட அலுவலகம் ரூ. 4,35, 500க்குரிய வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications