காதலன் நினைவு..தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்து திருமணத்தை நிறுத்திய மாணவி
கோவை: காதலனை மறக்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்துக்கு சென்ற போது காவ்யாவுக்கு அங்கு வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபருடன் செல்போனில் பேசி பழக்கம் அதிகரித்து காதலாக மாறியது.
இது குறித்து அறியாத காவ்யாவின் பெற்றோர் அவருக்கு, பல்லடத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயித்தனர். ஆனால் அப்போதும் காவ்யா தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மணப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்ட காவ்யாவுக்கு முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட முயன்றார். அப்போது தாலி கட்டவிடாமல் தடுத்த காவ்யா தனது காதல் கதையைக் கூறினார். அதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை கண்டு மனமுடைந்த மணப்பெண், மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த உறவினர், அவரை உடனடியாக மருத்துவமனையி்ல் சேர்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 2 வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். திருமணம் நின்றதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் சோகமாக திரும்பிச் சென்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications