இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 5 மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மீனவர்கள் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடைய கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ம் தேதி காலை 712 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர். அவர்களின் படைகையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் கடந்த 2 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உடனே மீனவர்களை மீட்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications