மத உணர்வை தூண்டிய பேச்சு வழக்கில் வருண்காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: பிலிபிட் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு பாஜக இளம் தலைவர் வருண்காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வருண்காந்தி வெற்றிப் பெற்றார். வருண்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வை தூண்டும் வகையி்ல் பேசியதாக, காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் அல்டமஸ் கபீர், எஸ்எஸ் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வி.எம்.சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமணி, வருண்காந்தியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறியாகும். இது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுந்த முறையில் விசாரிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது, என்றார்.
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பெஞ்சு, இது குறித்து வருண் காந்தியை பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications