For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் தொப்பூர் அருகே பஸ்-வேன் மோதி ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

சேலம்: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும், தனியார் சொகுசு வால்வோ பேருந்தும் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் வேன் சேலம் மாவட்டம் தொப்பூர் அருகே சென்று கொண்டிருக்கையில் சேலத்தில் இருந்து பெங்களூரூவுக்கு சென்ற தனியார் சொகுசு வால்வோ பேருந்துடன் பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 1.40 மணி அளவில் நடந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேரும், வேனில் இருந்த 2 பேரும் காயம் அடைந்தனர். பேருந்தில் பயணித்து காயமடைந்தவர்களை தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், வேனில் சென்று காயமைடந்த 2 பேரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

English summary
A private volvo bus and a van collided with each other at 1.40 am near Thoppur in Salem in which 7 Ayappa devotees from Andhra are killed. 2 from the bus and 2 from the van are injured. A bunch of Ayappa devotees from Andhra have reached Tamil Nadu in a van but unfortunately their van met with an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X