இருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்யாதது ஏன்?- உயர்நீதிமன்றம் கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் இருளர் குடியிருப்பில் வசித்த நான்கு இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் பத்து தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இருளர் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய போலீசார் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த பெண்களை உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டனர். இந்த வழக்கில் 2 வாரத்தில் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications