2வது மனைவி கொடுத்த புகார்- அமைச்சர் பரஞ்சோதி மீது 6 பிரிவுகளில் வழக்கு- கைதாவாரா?
திருச்சி: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது இரண்டாவது மனைவி டாக்டர் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி உறையூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் டி. ராணி இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசில் மோசடி புகார் அளித்தார்.
அதில் தன்னைத் திருமணம் செய்து, பல லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், தற்போது மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து குற்றவியல் நடுவர் மன்றம் எண் - 4-ன் மீண்டும் புகார் மனு அளித்தார். அதனை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்றம் நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார்.
6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இதனையடுத்து பரஞ்சோதி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (பி) (தகாத சொற்களால் திட்டுவது), 323 (அடித்தல்), 406 (பொருள்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றுதல்), 420 (நம்பிக்கை மோசடி செய்தல்), 493 (சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழ மறுப்பது), 506 (2) (கொலை மிரட்டல் விடுப்பது). மேலும், பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரஞ்சோதியின் ஓட்டுநர்கள் சம்பத் (25), குமார் (27) ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் நகல் திருச்சி குற்றவியல் நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்மிஸ் ஆவாரா?
திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பரஞ்சோதிக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது பரஞ்சோதி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் பரஞ்சோதி டிஸ்மிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications