உபி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரியில் தேர்தல்
டெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிபூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் என்று கூறப்படுகின்றது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிபூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் அனைத்து தேர்தல் பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று மேலும் கூறப்படுகின்றது.
தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியி்ல் உள்ளது. தேர்தல் வருவதற்கு முன்பு மாநிலத்தை 4 ஆகப் பிரிக்க மாயாவதி திட்டமிட்டு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநில விவசாயிகள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதா மட்டும் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படாவிட்டால் உ.பி.யில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அனனா ஹசாரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே அன்னா குழு காங்கிரஸை எதிர்த்து ஹரியானா மாநிலத்தில் பிரச்சாரம் செயதில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிபூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. உத்தரகண்டில் பாஜகவும், பஞ்சாபில் பாஜக-எஸ்ஏடி கட்சி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications