முல்லைப் பெரியாறு அணைக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு:பிரதமரிடம் தமிழக காங்.எம்.பி.க்கள் வலியுறுத்தல்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.தற்போது தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
மேலும், திமுக, அதிமுக, வைகோவைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பற்றி பேசினர். அப்போது அவர்கள், பெரியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் எம்.பி.க்கள் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்படும். இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்த தடவை நடத்தப்படும் பேச்சுவார்த்தையிலாவது தமிழகம் கலந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications