லோக்பால்: தனது செல்வாக்கின் மூலம் மத்திய அரசை மமதா நெருக்க வேண்டும்-அன்னா
டெல்லி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில், மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி தனது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, மத்திய அரசை பின்வாங்கச் செய்தார். அவரின் மிரட்டலால், மத்திய அரசின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.அதே போன்று, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர, மத்திய அரசுக்கு அவர் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், கடைநிலை அரசு ஊழியர்கள் ஆகியோரை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். முதலில் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்த மத்திய அரசு, இப்போது பின் வாங்கி உள்ளது. வாக்குறுதியை மீறி விட்டது. கடைநிலை அரசு ஊழியர்கள் விஷயத்தில் தேவைப்பட்டால் தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
பிரதமரையும், கடைநிலை ஊழியர்களையும் உட்படுத்தாத லோக்பால் மசோதா, முழுமையானதாக, வலுவானதாக இருக்க முடியாது. இந்த விஷயத்தில் அரசு ஒரே மாதிரி நிலையை எடுக்காமல், இரட்டை பேச்சு பேசி வருகிறது. இது சரியான செயலாக தெரியவில்லை.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, மத்திய அரசை பின்வாங்கச் செய்தார்.அவரின் மிரட்டலால்,மத்திய அரசின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே போன்று, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர, மத்திய அரசுக்கு அவர் நெருக்கடி கொடுக்கவேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச விவகாரங்கள் நாட்டை அச்சுறுத்தி வருகின்றன. லோக்பால் மூலம் இதை 100 சதவிகிதம் ஒழிக்க முடியாவிட்டாலும், 60-70 சதவிகிதம் அளவுக்காவது ஒழித்துக்கட்ட முடியும்.எனவே, வலுவான லோக்பால் அமைய, மம்தா பானர்ஜி குரல் கொடுக்க வேண்டும், மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்க நானும் தனது ஆதரவாளர்களும் போராடி வருகிறோம்.வலிமையான கிராமப்புற இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும். இப்போது செயல்படும் வழிமுறை தேசத்தின் முன்னேற்றத்துக்கு உதவாது.70 சதவீத பணத்தை மேம்பாட்டுக்கும், 30 சதவீத பணத்தை நிர்வாகத்துக்கும் பயன்படுத்துகிறோம். இல்லையெனில் நாம் நினைப்பது நடக்காது. தேசம் வளரவேண்டும் என்பதில் இளைஞர்கள் யாவரும் உறுதியுடன் உள்ளனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications