மேற்கு வங்க மாநிலம் விஷ சாராய பலி 117 ஆக உயர்வு
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் விஷ சாரயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்கள் சாராயம் அருந்தியதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று இரவு மது குடித்துள்ளனர். இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சாராயம் குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது விஷசாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் ஆத்திரம்
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முதற்கட்டமாக இறுதி சடங்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்த சோகம்
சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள எஎம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், 91 பேர் பலியான சோகம் மறைவதற்குள், விஷ சாராயம் குடித்து, 117 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications