For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்! - திடுக் தகவல்

By Shankar
Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
டெல்லி: இந்திய பங்குச் சந்தை மூலமாக பயங்கரவாதிகளுக்கு பெருமளவில் பணம் சென்றிருக்கும் விவரத்தை நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 முறை பங்குச் சந்தை மூலம் இப்படி பணம் சென்றுள்ளதற்கான ஆதாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.

இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பங்குச் சந்தையில் சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் பரிமாற்றமும் இதில் நடந்துள்ளது.

இதில் இடைத் தரகர்கள், பங்குச் சந்தை சார்ந்த சில நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றன," என்றார்.

English summary
The Financial Intelligence Unit (FIU) of the Finance Ministry has received information on ten suspected instances of terrorist financing using the stock exchanges in the last three financial years, Parliament was informed Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X