அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தேசிய நூலகமாக அறிவிக்கலாமா?- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தேசிய பொது நூலகமாக ஏன் அறிவிக்கக் கூடாது என்ற பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் என்றும் தெற்காசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். தேசிய பொது நூலகம் என்ற வரையறைக்குள் இந்த நூலகம் கொண்டுவரப்பட தகுதியானது. எனவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தேசிய பொது நூலகமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் வழக்கறிஞர் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கை ஜனவரி 19ந் தேதிக்கு ஒத்துவைத்தனர்.
இந்த நூலகத்தை மிகப் பெரிய ஆஸ்பத்திரியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications