ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம்; எண்ணெய் கப்பல்களை மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த, அந் நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
இந் நிலையில் அந்த நாட்டின் எண்ணெய்யை வாங்குவதை தடை செய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதற்காக அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற திட்டங்களை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முன் வைத்துள்ளன.
உலகில், ரஷ்யா, செளதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரானின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்துள்ளது. இப்போது இதையே முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பதிலடிக்கு ஈரான் தயாராகி வருகிறது.
செளதி உள்பட வளைகுடாவில் உள்ள நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் Strait of Hormuz வழியாகத் தான் வெளியுலகை அடைந்தாக வேண்டும். செளதி-ஐக்கிய அரபு நாடுகள்-ஈரானுக்கு இடையே உள்ள இந்த கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் ஈரான் கடற்படை போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தப் பாதை வழியாகவே உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 5ல் 1 பங்கு பயணித்தாக வேண்டும் என்ற நிலையில் இந்தப் பாதையை ஈரான் மூடினால், இந்தியா உள்பட உலகெங்கும் பெரும் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படும்.
இந் நிலையில், இந்தப் பாதையை மூடினால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications