ஜனவரி 18ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் ஜனவரி 18ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுனர் ரோசய்யாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இது 14வது சட்டப் பேரவையின் 3வது கூட்டத் தொடர் ஆகும். 18ம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் என்று சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுனர் ரோசய்யா உரையாற்றுகிறார். தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படப் போகும் திட்டங்கள் பற்றியும் ஆளுனர் உரையாற்றக்கூடும்.
தமிழக ஆளுனராகப் பொறுப்பேற்ற பிறகு பேரவையில் ரோசய்யா முதல் முறையாக உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவர். இந்த விவாதத்துக்கு அரசின் சார்பில் பதில் அளிக்கப்படும். இதன்பின் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
இந்தக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நடக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதால் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications