ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதத்தைப் பார்த்தார் ஜெ.- நிவாரண உதவிகள் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் ஜெயலலிதா.

இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தபடி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் கடலூர் அண்ணா திடலில் தரையிறங்கினார் ஜெயலலிதா. இதையடுத்து அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு 25 பேருக்கு தனது கையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம், குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிதியுதவி உள்ளிட்டவற்றை அளித்தார்.பின்னர் புயல் பாதிப்பு குறித்து மக்கள் யாரும் கவலைப்படக் கூடாது. உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.சி.சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவள்ளி ஆகியோரும் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பினார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+