விடுதலைச் சிறுத்தைகள் பொதுக்குழு ஜனவரி 6க்கு மாற்றம்- திருமாவளவன்
சென்னை: திருச்சியில் ஜனவரி 6-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த திங்கள்கிழமை (ஜன. 2) திருச்சியில் நடைபெற்ற கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி திருச்சியில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பொதுக்குழுவில் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்பட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் புதிதாக நியமனம் செய்வதற்கான செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அப்பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுக்குழு அரங்கிலேயே தரப்படும். விண்ணப்பங்களை ஜனவரி 31-க்குள் அனுப்ப வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications