தங்க நகைகளுக்கு பி.ஐ.எஸ் முத்திரை அவசியம்: மத்திய அரசு

பத்துரூபாய் பூ வாங்கினால் கூட பலமுறை பார்த்து வாங்கும் மக்கள், பலஆயிரம் செலவு செய்து வாங்கும் தங்க நகைகளின் தரம் குறித்து கவலைப்படுவதில்லை. தரமான தங்கம் என்பதை உறுதிப்படுத்த, தங்க நகைகளுக்கு பி.ஐ.எஸ். ஹால்மார்க்' முத்திரை போடப்படுகிறது.
ஆனால் பி.ஐ.எஸ் ஹால்மார்க் முத்திரை குறித்து பெரும்பாலான நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.
முத்திரை அவசியம்
எனவே தங்கத்தின் தரம் குறித்து பொதுமக்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிப்பதற்காக, அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்தது. இதற்காக, 1986-ம் ஆண்டின் தர நிர்ணய சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் ஆகிறது.












Click it and Unblock the Notifications