அர்ஜென்டினா அதிபருக்கு புற்றுநோயில்லை: தவறான கணிப்பு என தகவல்
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் டி கிர்ச்னருக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் டி கிர்ச்னருக்கு தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெறும் நேரத்தில் துணை அதிபர் நாட்டுநட்பபுகளை கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் அருகேயுள்ள பிலார் ஆஸ்ட்ரல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கிர்சனரின் தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது.
அதன் பிறகு அந்த சுரப்பியை பரிசோதித்து பார்க்கையில் தான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த மாத இறுதியில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் மருத்துவமனையில் இருந்தபோது நூற்றுக் கணக்கானோர் அவர் குணமடைய வேண்டி 'ஸ்டெரன்த் கிறிஸ்டினா' என்ற வாசகம் அடங்கிய பேனர்களை ஏந்தி நின்றனர். அவருக்கு புற்றுநோய் இல்லை என்று தெரிய வந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications