உ.பி. தேர்தல்: பிப். 4ல் நடப்பதாக இருந்த முதல் கட்ட தேர்தல் மார்ச் 3க்கு மாற்றம்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 4ம் தேதி நடப்பதாக இருந்த முதல் கட்ட தேர்தலை கடைசிக் கட்ட தேர்தலாக தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி மார்ச் 3ம் தேதி கடைசிக் கட்டமாக இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.
பிப்ரவரி 4ம் தேதி இஸ்லாமியர்கள் கொண்டாடும் பராவபாத் திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
உ.பி. சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்தத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி உ.பியில் முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும். கடைசிக் கட்டமான 7வது கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதி நடைபெறும்.
முதல் கட்டத் தேர்தலில் 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுவதாக இருந்தது. இங்கு தற்போது கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மொத்தம் 403 சட்டசபைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications