எங்களுக்குத் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு-திமுக அறிவிப்பு
சென்னை: சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழக அரசு அறிவித்தாலும் எங்களுக்கு தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. அதை சிறப்பாக கொண்டாடுவோம் என்று திமுகவினர் அறிவித்துள்ளனர்.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று அப்போது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் கூறுகையில்,
தை முதல் நாளை தமிழ்புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். திமுக கொடி ஏற்றி அலங்கார விளக்குகள் அமைத்து மகளிரணி சமத்துவ பொங்கலிட வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள்தான் அதாவது ஏப்ரல் 14ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. கடந்த திமுக ஆட்சியில் இதை மாற்றி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக கொண்டாட சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போதே ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும் என்றுசட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவது என்று திமுக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications