தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 100 கோடி தர அரசு ஊழியர்கள் முடிவு
மதுரை: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு ஊழியர்கள் சார்பில் ரூ. 100 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் கு.பாலசுப்பிரமணியம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் மதுரையில் நடத்தப்படுகிறது. 28-ந் தேதி பல்வேறு சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வு, பொதுத்துறைகளை தனியார் மயமாக்கல் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் அரசுப் பணியாளர் சங்கமும் கலந்து கொள்ளும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தினை கைவிட்டு, பழைய திட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண உதவியாக நிதி கேட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண உதவியாக ஒரு நாள் ஊதியத்தை வழங்க எங்களுடைய மத்திய குழு கூடி முடிவு செய்யும். இதில் அரசுப்பணியாளர் சங்கம், சகோதர மற்றும் இணைப்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒருநாள் ஊதியமான ரூ.100 கோடியை அரசிடம் வழங்க இருக்கிறோம்.
புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகளை தனி அதிகாரிகளை நியமித்து ஒழிக்க வேண்டும். அதன்பிறகு டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications