புதிய வாக்காளர் சேர்க்கை - வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேனி கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

தேனி: வாக்காளர் அட்டை பெறாத 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

2012ம் ஆண்டு ஜன.1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் துணைப் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993, டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பிறந்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். இதற்காக வரும் 13ம் தேதி
வரை புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தகுதியுள்ளவர்கள் தங்களது வயது, இருப்பிடச் சான்று நகலுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.
தகுதி அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களின் பெயர் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இம்மாதம் 25ம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து புதிய வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

புதிய வாக்காளர் சேர்க்கைக்கு தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நேரு யுகேந்திரா இளையோர் மன்றத்தினர் உள்ளிட்டோர் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+