உ.பி.யில் காங்.கைத் தாக்காமல் 'பொத்தாம் பொதுவாக' பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு

Subscribe to Oneindia Tamil

காஸியாபாத்: உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுக் குறி வைத்துத் தாக்காமல் பொதுவான முறையில் பிரசாரம் செய்வது என்று அன்னா ஹஸாரே குழு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

அன்னா ஹஸாரே குழுவினர் நேற்று காஸியாபாத்தில் கூடி ஐந்து மாநில தேர்தல் பிரசாரம் குறித்து விவாதித்தனர். குறிப்பாக உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அன்னா ஹஸாரே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் முக்கிய உறுப்பினரான கிரண் பேடி கலந்து கொள்ளவில்லை. சில தனிப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அதேபோல பிரபல சமூக சேவகர் மேதா பத்கரும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர் ஒருகடிதம் அனுப்பியிருந்தார். அதில், காங்கிரஸை மட்டும் லோக்பால் விவகாரத்தில் நாம் குறிப்பிட்டுத் தாக்கக் கூடாது. வலுவான லோக்பால் அமையாமல் போனதற்கு அனைத்துக் கட்சிகளுமேதான் காரணம் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பெரும்பாலான உறுப்பினர்களும் காங்கிரஸை மட்டும் தாக்கி பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட எந்தக் கட்சியையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் ஊழல் எதிர்ப்பையும், ஜன் லோக்பால் மசோதாவையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை தரப்பட்டது.

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸைத் தாக்கிப் பிரசாரம் செய்யாமல் பொதுவான முறையில் பிரசாரம் செய்வதுதான் நல்லது என்றும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அன்னாவிடம் தெரிவிக்க அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரஷாந்த் பூஷனும் இன்று ராலேகான் சித்திக்குச் செல்கின்றனர். அப்போது கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த யோசனைகளை அவர்கள் அன்னாவிடம் தெரிவிப்பார்கள்.

செய்தியாளர்களிடம் பிரஷாந்த் பூஷன் பேசுகையில், இன்றைய கூட்டத்தில் பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவை குறித்து அனைவரும் விவாதித்தோம். எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எப்படி பிரசாரத்தை வலுப்படுத்துவது என்பது குறித்தும் விவாதித்தோம். அன்னாவும், சில முக்கிய உறுப்பினர்களும் கூட்டத்தில் இல்லாததால், முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அன்னாதான் இறுதி முடிவை எடுப்பார்.

முன்னதாக காங்கிரஸை கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்வது என்று அன்னா குழு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் இதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்னா ஆதரவாளர்கள் பலரே இந்த முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக மும்பையில் அன்னா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தோல்வி அடைந்தது. கூட்டமே வரவில்லை.

இதையடுத்தே தற்போது தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசிக்க அன்னா குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். அதில் காங்கிரஸ் டெபாசிட்டைப் பறி கொடுத்து படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அன்னா குழுவின் பிரசாரத்தால் அல்ல என்பதும் முக்கியமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+