தேசியக் கோடி விற்பனை: அன்னா போராட்டத்தை விட குடியரசு தினத்திற்கு குறைச்சல்தான்!

அன்னா ஹசாரேயின் போராட்ட காலத்தில் விற்பனையானதைக் காட்டிலும் மிகக் குறைவான அளவே குடியரசு தின கொண்டாட்ட வாரத்தில் தேசியக் கொடி விற்பனை ஆகியிருக்கிறது என்பது ஐதராபாத் வியாபாரிகளின் வேதனை.
"ஆண்டுதோறும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான தேசியக் கொடிகளை வாங்கி விற்பனை செய்த நிலைமை போய் தற்போது 4 ஆயிரம் ரூபாய்தான் கிடக்கும் நிலை ஏறட்டிருக்கிறது என்பது ஐதரபாத்தைச் சேர்ந்த கிரிதர் வியாஸ் என்ற விற்பனையாளரின் ஆதங்கம்.
தேசியக் கொடிகளின் விற்பனை சரிவுக்கு என்னதான் காரணம்?
ஆண்டுக்கொருமுறை வந்து செல்லும் நாட்டின் உயரிய விழாவான குடியரசு தின கொண்டாட்டங்கள் எல்லாம் ஆந்திர மாநிலத்தில் குறிப்பாக தெலுங்கானா பகுதிகளில் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. அதுவும் உச்சகட்ட தெலுங்கானா போராட்ட நடைபெறும் நடப்பு ஆண்டில் விடுமுறை நாளிலாவது நிம்மதியாக இருக்கு மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை எட்டிப்பார்க்கலாம் என்ற 'மினி விடுதலை" உணர்வுதான் தேசியக் கொடி விற்பனையின் சரிவுக்கும் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications