இத்தாலி கப்பல் விபத்து: மன உளைச்சலுக்கு ரூ 7 லட்சம் நஷ்டஈடு!
கிக்லியோ தீவு : இத்தாலி சொகுசுக் கப்பல் விபத்தில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான பயணிகளுக்கு தலா 7 லட்சத்து 15ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 13ம் தேதியன்று இத்தாலியின் ரோம் நகரத்திற்கு அருகில் உள்ள கிக்லியோ தீவு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கோஸ்டா கான்கார்டியா என்ற கப்பல் பாறையில் மோதி கடலில் கவிழ்ந்தது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இன்னமும் 16 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
11 ஆயிரம் யூரோ
இந்த நிலையில் விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள் 3000 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நிவாரணம் தர கப்பல் நிர்வாகம் முன்வந்துள்ளது. ஒவ்வொரு பயணிகளுக்கும் தலா 11 ஆயிரம் யூரோ அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 7 லட்சத்து 15 ஆயிரம் வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 81 லட்சம் வழங்கவேண்டும் என்று கோடாகான்ஸ் என்ற மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இத்தாலி கப்பல் விபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் காணமல் போய் உள்ளார். 200க்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications