கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்பது பொய்: நிபுணர் குழு தலைவர்
கன்னியாகுமரி: அணு உலையும், அணுகுண்டும ஒன்றல்ல. கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்று மத்திய நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழுவினர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் நாளை (31ம் தேதி) நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் அறிக்கையை அளிக்கவிருக்கின்றனர்.
இந்த குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது,
கூடங்குளம் அணு உலை தொடர்பான மக்களின் பயத்தை போக்க மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே அனைத்து அம்சங்களையும் தீவிரமாக ஆராய்ந்து போராட்டக் குழுவினருக்கு பதில் தந்துவிட்டோம். அதே போல் நாங்கள் மீண்டும் விரிவாக விவாதித்து அவர்கள கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பதில் சொல்வது.
அணு உலையும், அணுகுண்டும் ஒன்றல்ல. அணு உலை வெடித்தால் அணு குண்டு வெடிப்பது போல் ஆகிவிடும் என்ற தவறான கருத்துகள் மக்களிடம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆதிய நாடுகளில் ஏற்பட்ட விபத்து போல் இங்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பானது. இந்தியாவில் 6 அணு உலைகள் கடந்த 40 வருடங்களாக பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை எந்த விபத்தும் நடக்கவில்லை. அந்த 6 அணு உலைகளை விட கூடங்குளம் அணு உலை மிக மிக பாதுகாப்பானது.
இங்கு வேலை பார்க்கும் விஞ்ஞானிகளும் இங்கேயே தான் தங்கியிருக்கிறார்கள். அப்படி பிரச்சனை என்றால் விஞ்ஞானிகள் அணு உலை அருகே இருப்பார்களா. எனவே, கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications