எங்க கோரிக்கையை ஏற்று கடலூரில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்: ராமதாஸ் சந்தோஷம்!

இது குறித்து அவர் கூறியதாவது,
சட்டசபையில் ஆளுநர் ரோசைய்யா நிகழ்த்திய உரை பொதுவாக ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவையாகும். கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் சேதமடைந்த குடிசைகளுக்குப் பதிலாக அரசு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்து அதை குடிசையில்லா மாவட்டமாக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த கோரி்ககையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் ரூ.1000 கோடியில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதை பாமக சார்பில் வரவேற்று பாராட்டுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்படும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. மேலும் உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில சுயாட்சியை உறுதி செய்வதற்காக எழுப்பப்பட்ட முழக்கங்களையும் வரவேற்கிறோம் என்றார்.
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு தலைவர்): ஆளுநரின் உரை முதல்வரின் அறிவிப்புகளின் தொகுப்பு போன்று உள்ளது. மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுவது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. இன்னும் 5 ஆண்டுகள் மின்வெட்டும் தொடரும் என்று தெரிகிறது.
மேலும் தொழில், வேலை வாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு குறித்தும், கூடங்குளம் விவகாரம் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் தி்ட்டம் வரவேற்கத்தக்கது.
குரு (பா.ம.க.): தானே புயல் விவசாயிகளுக்கு 20 ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தீர்வு காண்பது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. மின் பற்றாக்குறை உள்ள நிலையில் கூடங்குளம் விவகாரம் குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் ஆளுநர் உரை ஏமாற்றம் அளி்ப்பதாக உள்ளது.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு): ஆளுநர் உரையை பொதுவாக வரவேற்கிறோம். வறுமை ஒழிப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் உள்ளன. மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறோம். அதே சமயம் தொழிலாளர் நலம், தொழிலாளர் நலவாரியம் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): முதல்வர் தினமும் வெளியிடும் அறிக்கைகளின் தொகுப்பே ஆளுநர் உரை. மின்வெட்டு, கூடங்குளம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி): ஆளுநர் உரையை வரவேற்கிறோம். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்திருப்பதும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது.












Click it and Unblock the Notifications